சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏரியா சபை கூட்டங்கள் அமர்களமாக நடைபெறுகின்றன.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின் குறைகள் கோரிக்கைகளை கேளுங்கள் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்ப சென்னை மாமன்ற கூட்டத்தில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த வேண்டுமென மாமன்றம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஒரு வார்டில் பத்து இடங்களில் கிராமங்களில் நடப்பது போன்று ஏரியா சபை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது ஒரு வார்டு 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 10 நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்வு செய்யப்படும் நபர் அந்தப் பகுதியில் உள்ள பிரச்னை களை மாநகராட்சி மன்ற உறுப்பினர் கவனத்திற்கும் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு செல்லலாம் .அந்த பத்து நபர்கள் தலைமையில் ஏரியா சபை கூட்டம் அந்தந்த பகுதியில் நடைபெறும்.
இந்த கூட்டங்களில் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பி னரும் அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மின்சார துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு செலவினமாக மாநகராட்சி சார்பில் வருவாய் ரூபாய் 5000 வழங்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இது போன்ற கூட்டங்கள் நடக்கிறது. உங்களது குறைகளை கூறுங்கள் அதிகாரிகள் நேரடியாக தீர்த்து வைப்பார்கள் என முன்கூட்டியே விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
இதனால் அந்த தெருவில் மக்கள் ஆர்வத்துடன் கூடுகின்றனர். பெண்கள் கைகளில் மைக்குகள் கொடுக்கப்படுவதால் தங்களது கோரிக்கைகள் குறைகள் தொடர்பாக சரமாரியாக புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கி வைக்கின்றனர்.
அதற்கு அதிகாரிகள் திணறினாலும் பதில்கள் சொல்லி சமாளிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற ஏரியா சபை கூட்டங்கள் நடைபெற்றால் மிக நன்றாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பன்னிரண்டாவது வார்டு ராமானுஜம் நகரில் ஏரியா சபை கூட்டம், ஏரியா சபை தலைவர் ருத்ரமூர்த்தி தலைமையில், மாமன்ற உறுப்பினர் வீ. கவிகணேசன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார் உட்பட ஏராளமான பொது நல ஆர்வலர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் தரப்பில், கொசு மருந்து அடித்தல், வீடுகளில் மருந்துகள் மாத்திரைகள் வழங்குதல், மழைநீர் தேங்குதல், பக்கத்து வீட்டாருடன் தகராறுகள், மின்சார பிரச்னைகள், சாலை பழுது பார்த்தல், வீட்டு வரி என பல்வேறு பிரச்னைகளை அப்பகுதி மக்களும் பெண்களும் எடுத்துக் கூறினார்கள்.
ஒரு சிலர் மாமன்ற உறுப்பினரின் பணியை பாராட்டியும் பேசினர். அரசியல் சார்பற்று நடைபெற்ற இந்த பகுதி சபைக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.