Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்தில் மேம்பாட்டுக்கு ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சருக்கு தொல்லியல் ஆய்வுக்கழகம் பாராட்டு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன்

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவதற்காகவும்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காகவும்,சமணர் கலைக்கூடம் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை செய்வதற்காக ரூ. 4 கோடி  நிதி ஒதுக்கீடு செய்திருக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்   மனதார நன்றி பாராட்டுகிறது.

இதற்கு உறுதுணையாக இருந்த சுற்றுலா வளர்ச்சி துறை அமைச்சர்  கா.ராமச்சந்திரன் , சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும்,

இதற்கான கருத்துருவை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, சுற்றுலாத்துறை ஆணையர், புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துச்சாமி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

உலக அளவில் புகழ்பெற்ற அஜந்தா ஓவியங்களுக்கு இணையாக போற்றப்படும் சித்தன்னவாசல் ஓவியங்களைக்
காணவும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி கல்வெட்டுகள், குடைவரை லிங்கம்,அய்யனார் நாட்டார் வழிபாட்டு சின்னங்கள்,பெருங்கற்கால கல்திட்டைகள், கல்வட்டங்கள்.

பனங்குடி கற்றளிக்கோவில் என பத்துக்கும் மேற்பட்ட தொல்லிடங்கள் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் காணப்படுவதால், இந்த அறிவிப்பு தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், மொழி ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் , பண்பாட்டு விரும்பிகளுக்கும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top