Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

புதுக்கோட்டையில் மே 7 -ல் ராணி ரமாதேவி ஆர் தொண்டைமான் உருவப்படத்திறப்பு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மே 7-ல் ராணி ரமாதேவி ஆர். தொண்டைமான் உருவப்படத்திறப்பு விழா நடைபெறவுள்ளகது

புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்த மாட்சிமை தங்கிய  மாமன்னர்  ஆர். ராஜகோபால தொண்டைமான் அவர்களின் சகோதரர் ராஜ்குமார் ஆர்.ராதா கிருஷ்ணன்  தொண்டைமான் அவர்களின் மனைவியும், ராஜ்குமார் ஆர். விஜயரெகுநாத தொண்டைமான் அவர்களின் அண்ணியும்.

இன்றைய மாட்சிமை தங்கிய மன்னர் ராஜா ஆர்.ராஜகோபாலதொண்டைமான்-ராஜ்குமாரி ஜானகி மனோகரி ராஜாயி ஆகியோரின் தாயாரும், திருச்சிராப்பள்ளி மேனாள் மேயர் ராணி சாருபாலா ஆர். தொண்டைமான் அவர்களின் மாமியாரும் ராஜ்குமார் ஆர். விஜயகுமார் தொண்டைமான் அவர்களின் தாயாரும், ராஜமாதாவுமான ராணி ரமாதேவி ஆர் தொண்டைமான் அவர்களின் திரு உருவப் படத் திறப்பு விழா 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புதுக்கோட்டை பல்லவன்குளம் மேற்கு கரையில் அமைந்துள்ள மன்னர் மாளிகையில் நடைபெற உள்ளது.

மாட்சிமை மிக்க பிற சமஸ்தான மன்னர் குடும்பத்தினர் அமைச்சர் பெருமக்கள்,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக  ராஜமாதா படத்திறப்பு விழாக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top