Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

புதுக்கோட்டையில் நாட்டின் முதல்பெண் மருத்துவர் முத்துலெட்சுமி அம்மையார் உருவச்சிலை திறப்பு

புதுக்கோட்டை

புதுகை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் உருவச்சிலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி  அம்மையார் முழு திருவுருவச் சிலையை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

 புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப் பட்டுள்ள தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் நாட்டின் முதல்  மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி  அம்மையார் முழு திருவுருவச் சிலையை காணொலிக்காட்சி வாயிலாக  (10.05.2023) திறந்து வைத்தார்.

தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்கு பெருமை தேடிதந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசைமேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றி பெருமைப்படுத்தும் வகையிலும் தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத்தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக்கோரிக்கையில் இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்த்தருத்த பெண்மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி  அம்மையாருக்கு புதுக்கோட்டையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் பெண்  டாக்டர் முத்துலட்சுமி  அம்மையாரின் முழு உருவச் சிலையை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி,  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு , தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு. இரா.செல்வராஜ்,  செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன்.

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பார்த்தசாரதி, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, கவிஞர் தங்கம்மூர்த்தி,  திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்தசந்திரசேகரன்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடங்கள்) வெ.சுகுமாறன், உதவிப் பொறியாளர்கள .நா.பாஸ்கர், சரவணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அ.பாரதி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top