Close
செப்டம்பர் 20, 2024 9:40 காலை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுக்கோட்டை

புதுகை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸார்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏ-வுமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று(மே22) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சியில்அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் விஜயபாஸ்கர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81  மதிப்புள்ள சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை: தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அதிமுகவை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

56 இடங்களில் குறிப்பாக டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததா விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அதில் இவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று (மே22) புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப் பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பன், ஆய்வாளர்கள்  ஜவகர், பீட்டர் ஆகியோர், நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top