உள்விளையாட்டரங்கப் பணிகள் நின்றுபோனது குறித்து ஆட்சியரிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, நின்று போயிருக்கும் உள்விளையாட்டரங்கம் கட்டும் பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளேன் என்றார் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். அதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் விரைவில் அளிப்பேன்.
புதுக்கோட்டையில் பல நலத் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன. ஒருசில திட்டங்களில் தொய்வுகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்ய அமைச்சர்கள், ஆட்சியரிடம் சொல்லியிருக்கிறேன். முதல்வரிடமும் விவரங்களைத் தெரிவிப்பேன்.
ஜல்லிக்கட்டு போட்டி, கலாசாரப் பட்டியலில் இருப்பதை விளையாட்டுப் பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பாக முதல்வரிடம் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் சிலம்பாட்ட வீரர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உள்விளை யாட்டு அரங்கம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டு முழுமை பெறாமல் இருப்பது குறித்து விரிவான அறிக்கை ஆட்சியரிடம் கேட்டுள்ளேன் என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார்.