Close
நவம்பர் 22, 2024 8:25 காலை

ஈரோட்டில் ரூ 10 -க்கு உணவு வழங்கி அசத்தும் ஆற்றல் உணவகம்..!

ஈரோடு

ஈரோடு பிரப் சாலையில் ஆற்றல் உணவகத்தை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குரு மகான் தொடக்கி வைத்தார்

ஈரோடு பிரப் சாலையில் தேவையான மக்களுக்கு தரமான உணவை பத்து ரூபாய்க்கு வழங்கி அசத்தும்  ஆற்றல் உணவகத்தை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குரு மகான் தொடக்கி வைத்தார்

ஈரோடு பிரப் சாலையில் உள்ள சிஎஸ்ஐ வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆற்றல் உணவகத்தை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குரு மகான் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அசோக் குமார் தலைமை  வகித்து பேசியதாவது: ஈரோடு பகுதியில் அறக்கட்டளை சார்பில் புதிய உணவக செயல்பட உள்ளது இன்று முதல்  பத்து ரூபாய் கட்டணத்தில் பசியாற விரும்புவோருக்கு ருசியான தரமான உணவை வாரம் 7 நாட்களும் காலை மதியம் இரவு என மூன்று வேளைகளிலும் அளவில்லா உணவு பரிமாற ஏற்பாடு செய்துள்ளோம்.

இதற்காக சிறந்த சமையல் கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் ஆறு பேர் இந்த பணியில் முழு நேரமாக ஈடுபடுகின்றனர் ஒரே நேரத்தில் 60 பேர் அமர்ந்து உணவு அருந்தலாம் காலை இட்லி சாம்பார் மற்றும் சட்னி எட்டு மணி முதல் 10 மணி வரையிலும் மதிய உணவு சாதம், சாம்பார், பொரியல், மோர் மற்றும் ஊறுகாய் 12 மணி முதல் 2 மணி வரையிலும் இரவு இட்லி சாம்பார் மற்றும் சட்னி. ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையும் பரிமாறப்படும்

தேவையான பொதுமக்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் பத்து ரூபாய் செலுத்தினால் போதும் போதிய உணவுகளை வாங்கி  சாப்பிடலாம்.

ஆற்றல் அறக்கட்டளை கடந்த 2021  -ஆம் ஆண்டு தொடங் கப்பட்டு அரசு பள்ளிகள் மேம்படுத்துதல், சமுதாயக் கூடங்கள் கட்டுதல், ஆலயங்கள் புதுப்பித்தல், கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்களை கௌரவித்தல்,  கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளித்தல் உள்ளிட்ட பணிகளை கடந்த மூன்று வருடங்களாக செய்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பசியாற விரும்பும் மக்களுக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் உணவகத்தை இன்று தொடங்கியுள்ளது தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அசோக் குமார் தெரிவித்தார்

நிகழ்ச்சியில், பி பி வி ஸ்கூல் டாக்டர் எல். எம். ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சி கே சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம், அக்னி நிறுவன தலைவர் தங்கவேல், இந்து கல்வி நிலையம் கே. கே. பாலு மற்றும் செங்குட்டுவன், ஒளிரும் பவுண்டேஷன். சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் விநாயகம் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

ஈரோட்டின் முக்கிய பிரமுகர்கள் ஆற்றல் அறக்கட்டளை செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top