Close
நவம்பர் 22, 2024 5:25 காலை

புதுக்கோட்டை ஆவின் தொழிற்சாலை யிலிருந்து அமோனியா வாயு வெளியேறிதால் பரபரப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆவின் பால் தொழில்சாலையில் அமோனியாவாயு வெளியேறதை தடுக்க வந்த தீயணைப்புத்துறையினர்

புதுக்கோட்டை ஆவின் பால் நிறுவனத்தில் பால் குளிரூட்ட பயன்படுத்தப்படும் குழாயிலிருந்து அமோனியம் கேஸ் வெளியேறியதால் தொழிலாளர்கள் உடனடியாக நிறுவனத்துக்குள் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாயு வெளியேறியதால்   அப்பகுதி மக்கள் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளாகினர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு கேஸ் வெளியேறும் வால்வை கண்டறிந்து அதனை மூடியதால்  பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் பால் பாக்கெட் தயார் செய்து ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 64 ஆயிரம் லிட்டர் பால் தயார் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் சூழலில் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில்  இந்த ஆவின் நிறுவனத்தில் பால் குளிரூட்டப்படும் இயந்திரத்திற்கு செல்லும் அலுமினிய குழாயில் இருந்து அமோனியம் கேஸ் வெளியேறியுள்ளது.

இந் நிறுவனத்திற்கு உட்பகுதி முழுவதும் கேஸ் வெளியேறியதால் மூச்சு திணறல் கண் எரிச்சல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலை விட்டு வெளியேறினர் .மேலும் அந்த பகுதி முழுவதும் அமோனியம் கேஸ் வெளியேறியதால் அப்பகுதி மக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதன்பின் தகவலின் பெயரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் விஷ வாயு தடுப்பு பாதுகாப்பு கவசங்களை அணிந்தவாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குள் சென்று முக்கால் மணி நேரத்திற்கு மேலாக போராடி கேஸ் வெளியேறும் வால்வு பகுதியை கண்டறிந்து அதனை அடைத்தனர்.

இருந்த போதிலும் அமோனியம் கேஸ் வெளியேறியதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்வதற்காக திருச்சி மற்றும் மதுரையில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களும் எவ்வாறு அமோனியம் கேஸ் வெளியேறியது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதோடு குழாய்களை ஆய்வு செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆவின் புதுக்கோட்டை மாவட்ட பொது மேலாளர் தங்கமணி கூறுகையில்:

அமோனியம் கசிவு ஏற்பட்ட உடனேயே நாங்கள் உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்களை வெளியேற்றி விட்டோம்.  இன்னும் மூன்று மணி நேரத்தில் மீண்டும் பால் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற வாய்வு கசிவு இதற்கு முன்னதாக ஏற்பட்டது இல்லை.பால் குளிரூட்டும் நிலையத்திற்கு செல்லும் குழாய் வால்வில் ஏற்பட்ட கசிவால் தான் அதிக அளவில் அமோனியம் கேஸ் வெளியேறி உள்ளது.

தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு வாய்வு கசிவை அடைத்து விட்டனர். அடுத்ததாக திருச்சி மற்றும் மதுரையில் இருந்து வரும் தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாழ்வு சரி செய்யப்பட்டு மீண்டும் பால் உற்பத்தி தொடங்கப்படும். இனிமேல் இது போன்ற ஒரு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top