Close
ஏப்ரல் 5, 2025 11:43 மணி

இணை இயக்குநர்பணி இடைநீக்கம்: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம்

புதுக்கோட்டை

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இணை இயக்குநரை இடைநீக்கம் செய்யப்பட்ட கண்டனத்துக்குரியது என்றார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
அன்னவாசலில் தனியார் பராமரிப்பில் இருந்த மனநலக் காப்பகத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மா. சுப்பிரமணியன்  எடுத்த எடுப்பில் இணை இயக்குநரை இடை நீக்கம் செய்திருக்கக் கூடாது. அவரிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.
மருத்துவர்கள் இல்லை, மருந்தாளுநர்கள் இல்லை, நிதியில்லை. இப்படிப் பலபிரச்னைகள் இருக்கின்றன. மாநிலம் முழுவதுமே இதுதான் நிலை என்ற போது, பணி நீக்கம் செய்வது தீர்வாகாது.  தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை இயக்குநர் ராமு நல்ல அதிகாரி. அவரை இடைநீக்கம் செய்ததை  நான் ஒரு  மருத்துவர் என்கிற நிலையில் அதை  கண்டிக்கிறேன் என்றார் டாக்டர் சி, விஜயபாஸ்கர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top