Close
நவம்பர் 22, 2024 5:57 காலை

பள்ளி, கல்லூரி மாணவர்களின்  வருகையால் மிளிரும் புத்தகத் திருவிழா..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பள்ளி மாணவர்கள்

பள்ளி, கல்லூரி மாணவர்களின்  வருகையால்  புதுக்கோட்டை டவுன்ஹாலில் நடைபெறும் 6-ஆவது புத்தக்திருவிழா  மிளிர்கிறது .

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தி வருகிறது.

புத்தகத் திருவிழாவிற்கு வாசகர்களை, பொதுமக்களை ஈர்ப்பதற்காக விழாக்குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பள்ளிக் கல்விதுறையின் சார்பில் மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசுப் போக்குவரத்து த்துறையின் வாகனத்திலும், தனியார் பள்ளிகளுக்கு சொந்த வாகனத்திலும் மாணவ, மாணவிகளை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
புத்தகத்திருவிழாவில் புத்தகங்கள் வாங்கிய குளத்தூர் மகாத்மா பள்ளிக்குழந்தைகள்

இதனைத் தொடர்ந்து கடந்த 5  நாட்களாக பள்ளி மாணவர்கள் புத்தகத் திருவிழாவுக்கு  படையெடுத்து வருகின்றனர். மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோளரங்கை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

மேலும், மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதோடு தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களையும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

புதுக்கோட்டைபுத்தகத் திருவிழாக்குழு தலைவர்- மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன், அ. மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார்,

எஸ்.டி. பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், த.விமலா, க.சதாசிவம், ஈ.பவனம்மாள்,கவிஞர் ஜீவி,கவிஞர் ராசி. பன்னீர்செல்வன், கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன், கிருஷ்ண வரதராஜன், கவிஞர் மு.கீதா ஆகியோர் திருவிழா வை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இப்புத்தகத் திருவிழாவில், தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அறிவியல், அரசியல், கவிதை, வரலாற்றுக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ்  112 அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top