Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் எஸ். ஆர். குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய  மாநில அளவிலான ஆணழகன் போட்டி 

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் முதல் பரிசு வென்ற வீரருக்கு பரிசளித்த தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரன்

புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் எஸ். ஆர். குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய  மாநில அளவிலான ஆணழகன் போட்டி  நடைபெற்றது                                                                                                                              புதுக்கோட்டையில் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் எஸ் ஆர் குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய  மாநில அளவிலான ஆணழகன் போட்டி புதுக்கோட்டை லேனா திருமண மண்டபத்தில்  சிறப்பாக நடைபெற்றது.

ஆணழகன் போட்டியை எஸ். ஆர். குழும நிறுவனங்களின் தலைவர்  எஸ். ராமச்சந்திரன்  குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தார்.

மேலும்  இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் தலைவர் ஜோனத்தன் ஜெயபாரதன், தலைவர் மற்றும்  கௌரவ தலைவர் எஸ்.வி. எஸ். ஜெயக்குமார், செயலாளர் ஆர் கிருஷ்ணாமுனி ,பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில்   எஸ். ஆர். பாலச்சந்திரன் சண்முகம், கல்வியாளர்கள் தங்கம்மூர்த்தி, அரசு வழக்கறிஞர் செந்தில்குமார்,    கம்பன் கழகச் செயலாளர் சம்பத்குமார்,  மற்றும்  பல்வேறு ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள், லயன்ஸ் சங்கங்களின் மகாராணி ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள்  கலந்து கொண்டு  ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிறைவாக  நடைபெற்ற போட்டியில் சையத் மன்சூர் பாஷா, ஷேக் முகமத், ஆர் முத்துக்குமார், ரமேஷ் கண்ணா , அருணாச்சலம், பாண்டியன் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நாமக்கலைச் சேர்ந்த என் சரவணன் என்பவருக்கு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்துடன்  ரூபாய் 2 இலட் சம் ரொக்கப்பரிசையும், இரண்டாவது பரிசாக த சென்னையைச் சேர்ந்த ஆன்ட்ரேஷன் என்பவருக்கு  ரூபாய் 1 லட் சம் ரொக்கபரிசைம், மூன்றாவது பரிசாக  சென்னையைச் சேர்ந்த பாண்டியனுக்கு  ரூபாய் 50,000  ரொக்கப்பரிசையும்  எஸ். ஆர் குழுமத்தின் எஸ் ராமச்சந்திரன் வழங்கி பாராட்டினார்.

தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து  210 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் பெண்களும் இப் போட்டிகளில் கலந்து கொண்டு  சாதனை புரிந்தனர். தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் சங்கத் தலைவர் எம். ராஜேந்திரகுமார், பொதுச் செயலாளர் எம் அரசு, பொருளாளர் போஸ்,   புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்க    நிர்வாகிகள்,      கல்வியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்   கலந்து கொண்டனர்.

இப்போட்டியினை காண மாவட்டங்களிலிருந்து பல்வேறு விளையாட்டு வீரர்களும் வருகை புரிந்தனர். நிகழ்வை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி. ஜவஹர்  தொகுத்து வழங்கினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top