Close
நவம்பர் 22, 2024 6:37 காலை

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 71,006 பேர் பயனடைவர்- ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

காலை சிற்றுண்டித்திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் மூலம்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 71,006 பேர் பயனடைவார்கள் என ஆட்சியர்  மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியர்

முதலமைச்சரின் காலை  உணவு வழங்கும் திட்டத்தின்  முன்னோட்டமாக 16 மாவட்டங்களில் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள 17 வட்டாரங்களில் அரசு தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி கடந்த செப்டம்பர் 2022 மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து  நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கை அறிவிப்பினை தொடர்ந்து, நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்  விரிவாக்கம் செய்யும் நிகழ்வை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  (ஆகஸ்ட் 25)   நாகை மாவட்டத்தில் தொடக்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1048 தொடக்கப்பள்ளிகள், 276 நடுநிலைப்பள்ளிகள், 2 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1326 பள்ளிகளில் 71,006 மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் மகளிர் உதவிக்குழு சுய உறுப்பினர்களைக் கொண்டு சத்தான காலை சிற்றுண்டி 25.8.2023 -ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி நாட்களிலும் காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை அனைத்து பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top