வடசென்னையில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு கேரளப்பெண்கள் வரவேற்றனர்.
வடசென்னை மலையாளிகள் சங்கம் சார்பில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வடசென்னை மலையாளிகள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கேரள பாரம்பரிய முறைப்படி செண்டை மேளங்கள் முழங்க மாவேலி மன்னரை வரவேற்கும் வகையில் அத்த பூ கோலமிட்டு பெண்கள் கதகளி நடனமாடினர்.
பின்னர் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஓணம் பண்டிகை வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் வடசென்னை யில் வசிக்கும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட மலையாளி கள் திரளாக கலந்து கொண்டனர்.