Close
செப்டம்பர் 20, 2024 5:49 காலை

சென்னை மாத்தூர் பகுதியில் கொசு மருந்தை குடித்த குழந்தை பலி

சென்னை

மாத்தூரில் கொசு மருந்து குடித்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழப்பு...

சென்னை மாத்தூர் பகுதியில் கொசு மருந்தை குடித்த லட்சுமி என்ற குழந்தை செவ்வாய்க்கிழமை  உயிரிழந்தது.
மாதவரம் அடுத்த பால்பண்ணை மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி ( 35 ) இவர்  தனியார் கம்பெனியில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி நந்தினி.  இவர்களுக்கு   சக்தி  ( 4) மற்றும்   லட்சுமி ( 2) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல்  வீட்டில் உள்ள அறையில் குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர் .
தாய் நந்தினி   வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டி ருந்தாராம். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டின் அறையில் இருந்த பிளக் பாயிண்டில்  கொசு விரட்டி லிக்விட் கழற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமி லட்சுமி அதனை வாயில் வைத்து குடித்து விட்டதால் வாயில் நுரை தள்ளியபடி இருந்து உயிருக்கு போராடியது.‌ இதனை கண்ட  தாயார் பார்த்து பதறிதுடித்து உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர். ஆனால் மருத்துவமனை எடுத்துச் செல்லும் வழியிலேயே குழந்தை  உயிரிழந்தது.
இதுகுறித்து மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் இருந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு சார்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் பற்றி குழந்தையின் பெற்றோர்கள் கூறும்போது  குழந்தை மயங்கிய  நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்ததில் உடனே அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படவில்லை.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும் வழியில் குழந்தை இறந்தது பற்றி மருத்துவர்களை குற்றம் சாட்டினார்.
தற்போது மாத்தூர் பகுதியில் 3 குழந்தைகள் உட்பட மூதாட்டி இதே போல் கொசு லிக்குட் கசிந்து தீயில் மூச்சு திணறி இறந்த சம்பவத்தில் உயிரிழந்தது தொடர்பாக மேலும் இது போல் ஒரு சம்பவம் அப்பகுதியில் நடந்தது அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top