Close
மே 23, 2025 4:09 காலை

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிய வட்டாட்சியரின் இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி (29.8.2003) அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை காவல்துறையை ஏவி அராஜகமாக கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனங்களை தெரிவித்தும், இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலக சங்கம் சார்பில் நடைபெற்ற  காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top