Close
நவம்பர் 22, 2024 11:09 காலை

சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு புதுக்கோட்டையிலிருந்து டாக்டர் முத்துலட்சுமி நினைவுச்சுடர் புறப்பாடு

புதுக்கோட்டை

சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு டாக்டர் முத்துலட்சுமி நினைவுச்சுடரை அனுப்பி வைத்தார் எம்எல்ஏ சின்னத்துரை

சனாதன ஒழிப்பு மாநாடுக்காக புதுக்கோட்டையில் இருந்து டாக்டர் முத்துலட்சுமி நினைவுச்சுடர் கொண்டு செல்லும் நிகழ்ச்சியை கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை தொடக்கி வைத்தார்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் சனாதன ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு புதுக்கோட்டையில் இருந்து டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் நினைவு சுடர் கொண்டு செல்லப்படுகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞரின் சங்கத்தின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நாளை (செப்.2) நடைபெறுகிறது. அதனையொட்டி பு சமூக நீதிப் போராளி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் நினைவாக அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் இருந்து நினைவுச் சுடர் புறப்பட்டது.

புதுக்கோட்டை திலகவதியார் ஆதின மடத்தில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் சிலை அருகில் இருந்து தொடங்கிய நினைவு சுடரை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வழங்க தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் புதுக்கோட்டை சரோஜா பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்விற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி. பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். தயானந்த சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

மாநில துணைத்தலைவர் ஆர்.நீலா, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜீவி, தனிக்கொடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன் வரவேற்றார். பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார்.

தமுஎகச நிர்வாகிகள் மு.கீதா, பீர்முகமது, சுரேஷ் மாண்யா, கீதாஞ்சலி மஞ்சன், மைதிலி, புதுகைப் புதல்வன், அறிவியல் இயக்க நிர்வாகிகள் அ.மணவாளன், எம்.வீரமுத்து, மாணவர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஜனார்த்தனன், ஆர்.மகாதீர், கார்த்திகாதேவி, வாலிபர் சங்க நிர்வாகி கு.ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top