திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (95). இவருக்கு ரவி(76), அன்பழகன் (72) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். அம்சவள்ளி தனது மகன்கள் பேரன், பேத்தி, கொள்ளுபேரன், கொள்ளுப்பேத்திகளுன் மூன்று தலைமுறைக் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
தான் இறந்துவிட்டால் தனது கண்களை தானம் செய்துவிட வேண்டும் என அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக புதன்கிழமை அம்சவள்ளி திடீரன காலமானார்.
இதனையடுத்து அம்சவள்ளியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கண்களைத் தானம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதுகுறித்து சங்கரா நேத்ராலயா மருத்துமனைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த மருத்துவர்கள் அம்சவள்ளியின் கண்களின் நிலை குறித்து சோதனை நடத்தினர்.
இதில் கருவிழிகள் இரண்டும் நல்லநிலையில் இருந்ததால் அறுவைச் சிகிச்சை மூலம் இரண்டு கருவிழிகளையும் அகற்றி எடுத்துச் சென்றனர்.