Close
நவம்பர் 22, 2024 5:35 காலை

எஃகு இரும்புத் தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை

சென்னை

எஃகு இரும்புத் தகடுகளை ஏற்றி வந்த கப்பல் எம்.வி. ஐவிஎஸ் ஸ்பாரோவ்ஹாக்

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட19,906 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகளை ஒரே நாளில் கப்பலிலிருந்து இறக்கி சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது.

இதுகுறித்து சென்னை துறைமுகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னைத் துறைமுகத்தில் எஃகு இரும்புத் தகடுகள், கம்பிகள் ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்யப்படுகின்றன. ஆக.31-ம் தேதி எம்.வி. ஐவிஎஸ் ஸ்பாரோவ்ஹாக் என்ற கப்பல் எஃகு இரும்புத் தகடுகளை ஏற்றிய நிலையில் சென்னைத் துறைமுகத்திற்கு வந்ததடைந்தது.

துறைமுகத்தின் மேற்கு கப்பல் தளம் மூன்றில் கட்டப்பட் டிருந்த இக்கப்பலிருந்து எஃகு இரும்புத் தகடுகளை இறக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஒரே நாளில் 19,906 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகளை இறக்குமதி செய்து புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் எம்.வி. லக்கி என்ற கப்பலிருந்து 14,993 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகளைக் கையாண்டதே சாதனை அளவாக இருந்தது.

துறைமுகத்தலைவர் பாராட்டு:புதிய சாதனை அளவு எட்டுவதற்கு காரணமாக இருந்த கப்பல் முகவர் எலைட் சிப்பிங் ஏஜென்சீஸ், சரக்குகளை ஏற்றி இறக்கும் நிறுவமான (Stevedore) இந்தோ பசிபிக் சொலூசன் உள்ளிட்டவைகளி்ன் நிர்வாகிகள், துறைமுகப் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்டோரை நேரில் அழைத்து துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top