Close
ஏப்ரல் 5, 2025 11:44 மணி

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள தண்டனை

புதுக்கோட்டை

ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை அய்யனார்புரம் 3 -ஆம் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் தணேஷ்குமார் (25). போஸ்நகர் 9 -ஆம் வீதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் மகன் தமிழரசன் (35)
கடந்த 2018 -இல் புதுக்குளம் தென்கரையில் வைத்து தணேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசனை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றதாகவும், இதனை மனதில் வைத்துக் கொண்டு 2020 மே 17 -ஆம் தேதி தணேஷ்குமாரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று புதுக்குளம் அருகே மது வாங்கிக் கொடுத்து, பாட்டிலால் குத்திக் கொன்றார் தமிழரசன்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கணேஷ்நகர் போலீஸார், தமிழரசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் வெங்கடேசன் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
குற்றவாளி தமிழரசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1000   -ம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top