Close
செப்டம்பர் 19, 2024 7:22 மணி

தொழிலதிபர் மணல் ராமச்சந்திரன் வீடு, அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் எஸ்.ஆர். அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரனுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறையினர் மத்திய பாதுகாப்பு படையினரோடு தொடர்ந்து ஏழு மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

2016 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வரி ஏய்ப்பு  செய்ததாகவும்  தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரன் வீடு அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு, கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்து 2016 -ஆம் ஆண்டு அமலாக்க துறையினர்  மேற்கொண்ட  சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட விசாரணையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, புதுக்கோட்டையில் நிஜாம் காலனியில் உள்ள அலுவலகம்.

வடக்கு ராஜா வீதியில் உள்ள முருக பாலா ஆர்கிடெக்ட், அரியாணி பட்டியில் உள்ள செம்மண் குவாரி, மழவராயன்பட்டியிலுள்ள  அவரது உறவினரான வீரப்பன் என்பவரின் வீடு, புதுக்கோட்டை ஏ.எம்.ஏ நகரில் உள்ள தொழிலதிபர் ராமச்சந்திரனின் நண்பரான மணிவண்ணன் வீடு உள்ளிட்ட 6 இடங்களில்  அமலாக்க துறையினர் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்போடு காலை முதல் மாலை வரை சோதனை மேற்கொண்டனர்.

ஒரே நாளில் செந்தில் பாலாஜியின் உறவினர்களின் வீடுகள் மற்றும் மணல் ராமச்சந்திரனின் புதுக்கோட்டை வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்  திண்டுக்கல் ரத்தினம், திருச்சி மணல் குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டதால் இரண்டு சோதனை களுக்கும்  முடிச்சு போட்டு செய்திகள் வெளியானதால்  குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top