Close
செப்டம்பர் 20, 2024 5:29 காலை

ஒரே ஊருக்கு தட்கல் டிக்கெட் பெயரால் கூடுதல் கட்டணம் வசூல்.. ரயில்வே நிர்வாகம் மீது புகார்

ஈரோடு

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவர் கே.என். பாட்ஷா

தட்கல் டிக்கெட் பெயரால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரயில்வே நிர்வாகம் மீது  காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவரும் முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான கே.என்.பாட்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்ல இரண்டாம் வகுப்பு குளிர்சாதன டிக்கெட் கட்டணம் ரூ. 995 ஆகும்.  அதே சென்னையில் இருந்து ஈரோடு வருவதற்கு  இரண்டாம் வகுப்பு குளிர்சாதன டிக்கெட் தட்கல் கட்டணம் ரூ. 1,415 ஆகும்.

ஈரோடு
தட்கல் டிக்கெட்

சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன தட்கல் கட்டணத்தில் ஈரோடு வர ரூ.1590 ஆக கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.

ஈரோடு- சென்னை செல்ல மூன்றாம் வகுப்பு குளிர்சாதன டிக்கெட் ரூ. 720 ஆகும். அதே தட்கல் கட்டணம் ரூ. 1035 ஆகும். அதே பிரீமியம் தட்கல் டிக்கெட் முன் பதிவு செய்தால் ரூ. 3,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஈரோடு
தட்கல் டிக்கெட்

இரண்டாம் வகுப்பு குளிர்சாதன டிக்கெட் பிரிமீயம் தட்கல் முன் பதிவு செய்தால் ரூ. 4,000 வரை வசூல் செய்கிறார்கள். விமானத்தில் பயணம் செய்தால் டிக்கெட் குறைய குறைய கட்டணம் உயரும். அதேபோல் ரயிலில் பயணிப்பவருக்கு பிரீமியம் தட்கல் கட்டணம் உயர்ந்து கொண்டே செல்கிறது.

ஈரோடு
தட்கல் டிக்கெட்

ஒரே ஊருக்கு செல்ல விதவிதமான கட்டணங்களை தட்கல் கட்டணம் என்ற பெயரால் வசூலிக்கப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கட்டண கொள்ளையை ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிறுத்தவில்லையெனில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக ஈரோடு ரயில் நிலையம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் எனவும்  அதில் கே.என். பாட்ஷா எச்சரித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top