Close
நவம்பர் 21, 2024 5:09 மணி

பட்டாசு ஆலைகளில் நேரிடும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை

தமிழ்நாடு

வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.

கங்கர்செவல் கிராமத்தில் கடந்த 4ம் தேதி விக்டோரியா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் படுகாயமடைத்த கணேசன், ராஜா, முத்தம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேரில், கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பல்வேறு  பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகும் வேதனை சம்பவங்கள் நேரிட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி, விருதுநகர், மயிலாடுதுறை என பல்வேறு மாவட்டங்களிலும் வெடி விபத்துகள் நிகழ்ந்து பலர் பலியாகி யிருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்தியாவிலேயே பட்டாசு உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது என்பதும், தீபாவளிப் பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்துதான் பிற மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதும், இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் உள்ளன என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில்  பட்டாசு ஆலையில் வெடி விபத்து; விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிபட்டி கிராமத்தில் உள்ள  பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து,  சிவகாசி அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டியிலுள்ள பட்டாசு கிடங்கில் வெடி விபத்து; காஞ்சிபுரம் மாவட்டம் அடுத்த குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து என  விபத்துகள் பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

பட்டாசு விபத்துகளை தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் எடுக்க வேண்டுமென பலமுறை வலியுறுத்தி நான் அறிக்கை விடுத்துள்ளேன். இருப்பினும், எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. மாறாக, பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகள் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனை தடுக்க சரியான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டுமென  சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top