Close
அக்டோபர் 5, 2024 7:36 மணி

விபத்தில்லா அரசு பேருந்து ஓட்டுநர்கள் 23 பேருக்கு விருது

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் விபத்தில்லா அரசு பேருந்து ஓட்டுனருக்கு விருது வழங்குகிறார், டவுன் டிஎஸ்பி ஜி. ராகவி

விபத்தில்லா அரசு பேருந்து ஓட்டுநர்கள் 23 பேருக்கு விருது வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை வழங்கும் முகாம் புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பணிமனை வளாகத்தில் நடைபெற்றது .

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் துரைசாமி நர்சிங் ஹோம் இணைந்து நடத்திய நிகழ்வுக்கு, புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ராஜா முஹம்மது தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவல நேர்முக உதவியாளர் நடராஜன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, துணை ஆளுநர் ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் இப்ராஹிம் பாபு, துணைத்தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான், ரோட்டேரியன் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.  சிறப்பு விருந்தினராக நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.ராகவி  கலந்து கொண்டு கொண்டு விபத்தில்லாஅரசு பேருந்து ஓட்டுநர்கள் 23 பேருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தார்.

குழிப்பிறை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அழகப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். சர்க்கரை நோய் மற்றும் பாத சிகிச்சை சிறப்பு மருத்துவர் துரை நாகரத்தினம்  கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

புதுக்கோட்டை
விருது பெற்ற விபத்தில்லா அரசு பேருந்து ஓட்டுனர்கள்

முன்னதாக புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கருணைச் செல்வி வரவேற்றார். ரோட்டரி பிரார்த்தனையை புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அசோகன் வாசித்தார். நிறைவாக புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்க செயலாளர் சுகன்யா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாலைபாதுகாப்பு  விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜா செய்திருந்தார்,

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் முத்தன் அரசகுமார், பொருளாளர் சங்கர், ஜான்சி ராணி,  ஓம்ராஜ், பாரூக்ஜெய்லானி, ராமதாஸ், சங்கீதா, சலோமிலியோ, சித்ராதேவி, திட்ட இயக்குனர்கள் ஆரவாமுதன்,  முருகேசன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top