Posted by வசீகரன் on அக்டோபர் 28, 2023. Updated: 8:31 மணி
தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டுக்கு தேர்வான குழந்தைகளுக்கு பரிசளிக்கிறார், சுபபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன்
மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வாகி மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்தியா முழுவதும் நடத்தும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு குழந்தை விஞ்ஞானிகள் விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்படு கிறது.
மாவட்ட மாநாடு: இந்நிகழ்வை தமிழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங் கள் இணைந்து 31 -ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில் நடைபெற்றது.மாநாட்டுக்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ம.வீரமுத்து தலைமை வகித்தார்.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள், 100 க்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் கடந்த மூன்று மாதங்களாக நமது சுற்றுச்சூழல் மண்டலமும் உடல் நலமும் எனும் மையக் கருப்பொருளின் கீழ் 5 உப தலைப்புகளில் 200 -க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை களை அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று பிரிவுகளாக ஆய்வு கட்டுரைகளை செய்து வந்தனர்.
இவ்வாறு செய்யப்பட்ட மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சனிக்கிழமை 20 -க்கும் மேற்பட்ட நடுவர் குழுவிடம் ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரியில் இன்று சமர்ப்பித்தனர்.மண்டல மாநாடு: இந்த ஆய்வு கட்டுரைகளில் இருந்து தேர்வாகும் ஆய்வுக்கட்டுரைகள் நவம்பர் 4 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 10 மாவட்டங்கள் அடங்கிய கிழக்கு மண்டல அளவிலான மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.
விஞ்ஞானிகள் மாநாடு:இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுகள் மாநில மாநாட்டில் கலந்துகொள்ளும் இவ்வாறு மாநில மாநாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள் அகில இந்திய மாநாட்டிலும் கலந்துகொள்வர்.
பின்னர் இதிலிருந்து சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய விஞ்ஞானிகள் அனைவரும் கலந்து கொள்ளும்அகில இந்திய அறிவியல் மாநாட்டிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் எம்.மாணிக்கத்தாய், பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், மாநில செயற்குழு உறுப்பினர் எல். பிரபாகரன், எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் க.சதாசிவம், மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், நேரு யுவகேந்தரா மாவட்ட இளையோர் அலுவலர் கே.ஜோயல் பிரபாகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பின்னர் ஶ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் எஸ்.குமுதா, முதல்வர் எம்.அமுதா முன்னிலை வகித்தனர். நிறைவாக ஶ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கேடயங்கள், சான்றிதழ்கள், நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார்.
இதில் என்சிஎஸ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராமதிலகம், கல்வி ஒருங்கிணைப்பாளர் சி.ஷோபா, அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் த.விமலா, சை.மஸ்தான் பகுருதீன், ஆர்.பிச்சைமுத்து, ஆ.கமலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளையராஜா, உஷாநந்தினி, பழனிச்சாமி, ரஹ்மத்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் விவரம் :
இளநிலைப் பிரிவில் கருங்குழிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ராதிகா,வல்லவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கிருஷ்ணன், சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கீர்த்தி ஶ்ரீ, மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கோபிகா,மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி ரிகாஷ், வேதியன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கவியரசன்,
புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளி கிஷோர் குமார், ஆத்தங்கரைவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளி சார்மியா, ஆவனத்தான்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கிருபாகரன், நற்பவள செங்கமாரி அரசு உயர்நிலைப் பள்ளி ரோஷினி,
ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்மிளா காந்தி, மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயலினி, மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளி நித்யஸ்ரீ, புதுக்கோட்டை அரசு இரானியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி தியானோ ஆகியோர் செல்ல உள்ளனர்.
அதே போல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவில் நச்சாந்துப்பட்டி அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ராஜ் விக்ரம், குளத்தூர் முத்துசாமி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி தனியா ஸ்ரீ,
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முகமது பயாஸ், புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யுவாஸ்ரீ, அன்னவாசல் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி பூர்விகா, வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி ஷாலினி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.