வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட20,100 மெட்ரிக். டன் எஃகு இரும்புத் தகடுகளை ஒரே நாளில் கப்பலிலிருந்து இறக்கி சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டி யுள்ளது.
இதுகுறித்து சென்னை துறைமுக நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னைத் துறைமுகத்தில் எஃகு இரும்புத் தகடுகள், கம்பிகள் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆக.31-ம் தேதி எம்.வி. ஐவிஎஸ் ஸ்பாரோவ்ஹாக் என்ற கப்பலிலிருந்து 19,906 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகள் இறக்குமதி செய்யப்பட்டது.
இதுவரை இதுவே உச்சகட்ட சாதனை அளவாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த நவ.7-ம் தேதி சென்னைத் துறைமுகத்திற்கு வந்த எம்.வி. நகுவால் என்ற கப்பலிலிருந்து ஒரே நாளில் 20,100 டன் இரும்புத் தகடுகள் இறக்குமதி செய்யப்பட்டு புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது.
துறைமுகத்தலைவர் பாராட்டு:
புதிய சாதனை அளவு எட்டுவதற்கு காரணமாக இருந்த கப்பல் முகவர் சினெர்ஜி சிப்பிங், சரக்குகளை ஏற்றி இறக்கும் நிறுவனமான (Stevedore) ஜெனித் சிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்டவைகளி்ன் நிர்வாகிகள், துறைமுகப் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்டோரை நேரில் அழைத்து துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் புதன்கிழமை பாராட்டினார். .