Close
நவம்பர் 22, 2024 12:24 காலை

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள  பல்வேறு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை மாவட்டத்தில்; வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 582 – குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில்; நிரம்பியுள்ள நீரின் இருப்புக் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல், வெள்ளம் சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் மின்தடையினை சரி செய்வதற்கு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 5215 – மின்கம்பங்களும், 50 கி.மீ தொலைவிற்கான மின்கம்பிகள் மற்றும் 50 – மின்மாற்றிகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 – பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல் படக்கூடிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை எண் – 1077, 04322-222207 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top