Close
ஜூலை 7, 2024 11:04 காலை

புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி காணொலி மூலம் முதலமைச்சர் திறப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு பல் மருத்துவக்கல்லூரி திறப்பு விழா

புதுக்கோட்டையில் ரூ.67.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் 8.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத்துறை கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  புதன்கிழமை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (15.11.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் 67.83 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத்துறை கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் “மக்களைத் தேடி மருத்துவம்”

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும்-48”, நலவாழ்வு நடைப் பயிற்சி 8 கி.மீ. சுகாதார நடைபாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் மூன்றாவது பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்தல்70 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக, புதுக்கோட்டையில் 67 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை  தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

இக்கல்லூரியில் 2023-2024 ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் 50 மாணவர்கள் சேர்க்கைக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை மற்றும் நிர்வாகக் கட்டடம், மாணவ மாணவியர் விடுதிக் கட்டடம், ஆசிரியர் மற்றும் முதல்வர் தங்கும் விடுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

கூடுதலாக, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமணைக்கு 5 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தேவையான அதி நவீன உபகரணங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான ஆசிரியர், நிர்வாகம், மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமணை இந்தியாவிலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தரமான பல் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை ஏற்படும்.

பொது சுகாதாரத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 27 புதிய கட்டடங்களை திறப்பு:

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டங்களைச் சார்ந்த கீழாநிலை புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், ராசநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், பாலாண்டம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், நீர்பழனி துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம்,

மலைக்குடிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டடம், பரம்பூர் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், மேலமுத்துக்காடு துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், புலியூர் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், நாகுடி அரசு ஆரம்ப சகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், ஏம்பாவயல் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம்,

கோட்டைப்பட்டிணம் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், மணமேல்குடி துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், மும்பாலை துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், விச்சூர் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், பி.ஆர். பட்டிணம் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், நிலையூர் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், கொத்தமங்கலம் கிழக்கு துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம்,

கும்மங்குளம் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், குப்பக்குடி துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், எல்.என். புரம் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், விராலிப்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், வேங்கிடக்குளம் துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம்,

முத்துப்பட்டிணத்தில் செவிலியர் குடியிருப்பு, கட்டுமாவடி துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், நெல்வேலி துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், அழியாநிலை துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம், கருக்காக்குறிச்சி துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடம்என மொத்தம் 8.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக,  சட்டத்துறை அமைச்சர் எஸ். இரகுபதி,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கே. நவாஸ் கனி,  எம்.எம். அப்துல்லா,

சட்டமன்ற உறுப்பினர்கள் வை. முத்துராஜா, எம். சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்  ஐ.சா. மெர்சி ரம்யா., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு.டி.எஸ். செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. ஜெ. சங்குமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top