புதுகை நகரியம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (25.11.2023-சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என புதுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர்(இயக்குதல்-காத்தல், கிராமியம்) எஸ்.கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.