புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் 571 காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில், காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் 42 பேர் காயமடைந் தனர்.
தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமான புதுக்கோட்டையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன் குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
அதன் பின்னர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 571 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து களம் இறங்க அனுமதிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு தளத்துக்குள் 250 மாடு பிடி வீரர்கள் சுழற்சி முறையில் களம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து வெளியேறி காளைகளை காளையர்கள் அடக்கிய காட்சிகளும் அடக்க முயன்ற காட்சிகளும் பார்வையாளர் களை பரவசப்படுத்தியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாமல் வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்க ளும் ரொக்க பரிசுகளும் விழாக்குழுவினர் சார்பில் வழங்கப் பட்டது.
இந்த போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காளைகள் முட்டியதில் மொத்தம் 42 பேர் காயமடைந் தனர் .அதில் படுகாயம் அடைந்த எட்டு பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வத்தின் சாமி காளை களத்தில் நின்று விளையாடி யாரிடமும் பிடிபடாமல் முதல் பரிசை தட்டிச் சென்றது.
இதேபோல், தஞ்சை மாவட்டம், இராயமுண்டம்பட்டி கிராமத் தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் சுகேந்த் 12 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார்.
இவர்கள் இருவருக்கும் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வழங்கிய 2 பல்சர் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
முதல் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின்படி ஒரு ஏ டி எஸ் பி 3 டி எஸ் பி 10 ஆய்வாளர் 30 உதவி ஆய்வாளர் உட்பட 410 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதை போல் வருவாய்த் துறையினரும் தீயணைப்புத் துறையி னரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட னர்.