திருமயம் கோட்டம், திருமயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவுள்ளதால் வரும் சனிக்கிழமை (ஜன.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருமயம் மின் வாரிய உதவி செயற் பொறியாளர் (இயக்கலும் காத்தலும்) கா. ராமநாதன் வெளியிட்ட தகவல்:
திருமயம் கோட்டம், திருமயம் துணைமின் நிலையத்தில் வரும் 20.01.20234 -சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9. மணி முதல் மாலை 4. மணி வரை மின் விநியோகம்இருக்காது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
இராயவரம் மின்பாதை: திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், இராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியார்புரம்.
கோனாப்பட்டு மின்பாதை:குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாப்பட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, ஆதனூர்.
இராங்கியம் மின்பாதை:வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப் பட்டி, இராங்கியம், கண்ணனூர்.
விராச்சிலை மின்பாதை:மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி.லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை.
பெல்(B.H.E.L) மின்பாதை 1 & II : பெல் நிறுவனம். ஆகிய பகுதிகளில் வரும் சனிக்கிழமை (20.01.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். ஆகவே பொதுமக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.