Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

பல்லடம் நியூஸ் 7 நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல்: புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகை யாளர் சங்கம் கண்டனம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்

பல்லடம் நியூஸ் 7 நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைக் காட்சி நிருபராக இருந்து வருபவர் நேசபிரபு.இவர் கடந்த சில நாட்களாக மதுக்கடைத் தகராறுகள் குறித்து செய்தி வெளியிட்டு வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சில சமூகவிரோதிகள் தன்னைக் கண்காணிப்பதையும், தாக்க முயற்சிப்பதையும் உணர்ந்து காவல்துறையினருக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்துள் ளார்.

இந்த நிலையில் தான் புதன்கிழமை இரவு அந்த சமூகவிரோத கும்பல் நேசபிரபு மீது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மோசமாக தாக்குதல் நடத்தியுள்ளது.பலத்த காயங்களுடன் கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.

ரவுடிக் கும்பலின் இச்செயல் அதிர்ச்சியைத் தருகிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.முன்பே தகவல் கொடுத் திருந்தும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது மிகமோசமான முன்னுதாரணம்.

எனவே, தகவல் கிடைத்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காவல்துறையினர் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பட்டமான கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்து, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தி நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். எந்த வகையிலும் தப்பிவிடாத வகையில் அவர்கள் மீதான சாட்சியங்களை வைத்து தண்டனை பெற்றுத்தர திருப்பூர் மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் நேரடி கவனம் செலுத்தி, இதுபோன்ற ரவுடித்தனங்கள் பிற மாவட்டங்களில் நேரிடாத வகையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படு வதை உறுதி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் கோருகிறது.

பலத்த காயமடைந்த நிருபர் நேசபிரபுவுக்கு உயர் சிகிச்சை அளிப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தலைவர் சு. மதியழகன், செயலாளர் சா. ஜெயப்பிரகாஷ், பொருளாளர்
கே. சுரேஷ் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top