Close
நவம்பர் 22, 2024 1:04 காலை

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் இல்லை: இந்திய விவசாயிகள் சங்கம் கருத்து

புதுக்கோட்டை

இந்தியவிவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ். தனபதி

மத்திய அரசின் 2024-25 -ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை என இந்திய விவசாயிகள் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஜி.எஸ். தனபதி வெளியிட்ட அறிக்கை:

ரூபாய் 44 லட்சம் கோடிக்கான இந்த இடைக்கால  நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கான நிதி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 1.27 லட்சம் கோடியாகவே உள்ளது, உயர்த்தப்படவில்லை.

நதிகள் இணைப்புக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் இல்லை. விவசாயிகளுக்கான கடன் நிவாரணம், ஏதும் இல்லை. இயற்கை இடர்பாடுகளால் விளைந்து வீணாகும் விவசாய விளைபொருள்களை சேமிக்க புதிதாக சேமிப்புக் கிடங்கு கட்டும் திட்டம் ஏதும் இல்லை.

80 கோடி விவசாயிகள் வசிக்கும் நாட்டில் 11 கோடிப் பேருக்கு மட்டும் பிஎம் கிசான் திட்டத்தில் வழங்கப்படும்  ரூபாய் 6000/ உதவித்தொகை  உயர்த்தப்படவில்லை.இயற்கை வேளாண் மைக்கு உரிய முக்கியத்து வமும் தேவையான நிதி ஒதுக்கீடும் இல்லை.

வேளாண் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் எதிர்பார்த்த தனி நபர் பயிர்க் காப்பீடு மாற்றம் வரவில்லை. 30 கோடி பேர் காப்பீடு செய்ததில் 4 கோடி பேருக்கு மட்டும் காப்பீடு கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளில் மொத்த உணவு உற்பத்தி 9.8% திலிருந்து 7.1% ஆக குறைந்துள்ளது வளர்ச்சியில்லை .

பருவகால மாற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை. விவசாயக்கடன் பெற விவசாயிகளுக் கான சிபில் ஸ்கோர் தளர்த்தப்படவில்லை.50 கோடி பேர் கடன் வாங்கும் தகுதியை இழந்து தவிக்கும் நிலையில் உள்ளனர்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட நாட்கள்  விவசாயப் பணிக ளுக்கு செய்யும் அறிவிப்பு இல்லை.கிராமப்புற வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் இல்லை. மொத்தத்தில் பெருநிறுவன முதலாளிகளுக்கு சாதகமான நிதி நிலை அறிக்கையாகவே  இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையும் அமைந்துள்ளது அதிருப்தியளிக்கிறது என்றார் இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ். தனபதி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top