Close
நவம்பர் 24, 2024 12:08 காலை

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விஜயதரணி

தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு சென்ற  விஜயதரணி தன்னை பாஜகவுடன் இணைந்து கொண்டார். குமரி மக்களால் 3 முறை காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாக ஆனவர்.

கடந்த சில நாட்களாகவே அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், காங்கிரஸ் கட்சி மறுத்து வந்தது. இந்நிலையில் இன்று பாஜகவில் அவர் இணைந்தார்.

இதனைத்தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இதனிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து விஜயதரணி நீக்கப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி இன்று (24.2.2024) புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு அனுப்பி உள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில்  விஜயதரணி அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top