Close
செப்டம்பர் 18, 2024 3:32 காலை

தீ விபத்தில் காயம் அடைந்த குன்றக்குடி கோயில் யானை மரணம்: பொதுமக்கள் அஞ்சலி

சிவகங்கை

தீவிபத்தில் உயிரிழந்த குன்றக்குடி கோயில் யானைக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி அடிகளார்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதர் கோயில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த கோயில் யானை சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி  வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது.

உயிரிழந்த யானை சுப்புலட்சுமியின் உடல் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசை நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இறந்த யானையின் உடலுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சிவகங்கை
கோயில் யானைக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

இது குறித்து, குன்றக்குடியில் பொன்னம்பல அடிகளார் செய்தியாளர் களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான 54 வயது உடைய பெண் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் காயம் அடைந்து உயிரிழந்தது வேதனையளிக்கிறது யானையின் உயிரை காப்பாற்ற கால்நடை மருத்துவ குழுவினர், வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் போராடி 30 மணி நேரம் உயரிய மருத்துவ சிகிச்சை அளித்தும் யானை நம்மை விட்டு பரிபூரணம் அடைந்து விட்டது. யானையின் உயிரைக் காப்பாற்ற போராடிய மருத்துவத்துறை மற்றும் அனைத்து துறையினருக்கும் நன்றிகள்.

இறந்த யானை சுப்புலட்சுமி ஏறத்தாழ 54 ஆண்டுகளாக கோயில் திருவிழாக்கள், ஆதீன விழாக்களில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளதாகவும், யானையின் உயிரிழப்பு ஆயிரக்கணக்கான பக்தர்களின் மனதில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

(பட விளக்கம்- காரைக்குடி அருகே குன்றக்குடி கோயிலில் நேரிட்ட தீவிபத்தில் உயிரிழந்த யானை சுப்புலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்திய அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top