Close
நவம்பர் 14, 2024 4:47 காலை

மூடப்பட்டு வரும் ஏடிஎம்கள்.. என்ன காரணம்?

நாட்டில் அதிக பணப்புழக்கம் இருந்தபோதிலும், வங்கிகள் தங்களுடைய ஏடிஎம்கள் மற்றும் பணத்தை மறுசுழற்சி செய்வதை படிப்படியாக நிறுத்துவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம். குறிப்பாக யூபிஐ  பணப்பரிமாற்றத்தில்  மக்களின் பயன்பாடு அதிகரிப்பே காரணம் எனக் கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் 2.19 லட்சத்திலிருந்து 2024 செப்டம்பரில் 2.15 லட்சமாகக் குறைந்துள்ளது.

இந்தச் சரிவு முதன்மையாக ஆஃப்-சைட் ஏடிஎம்களில் குறிப்பிடத்தக்க குறைப்பு காரணமாகும். இது கடந்த ஆண்டு செப்டம்பரில் 97,072 என்ற உச்சத்திலிருந்து 2024 செப்டம்பர் வரை  87,760 ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தில் ரொக்கம் இன்னும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்து வருகிறது. 2022ம் நிதியாண்டில் 89% பரிவர்த்தனைகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12%, ஏடிஎம் பயன்பாடு குறைவாகவே உள்ளது.

ஒரு லட்சம் பேருக்கு 15 ஏடிஎம்கள் மட்டுமே உள்ளன. இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள், இயங்கக்கூடிய தன்மை மற்றும் பரிமாற்றக் கட்டணம் போன்ற ரிசர்வ் வங்கி விதிமுறைகள் ஏடிஎம் முதலீடுகளை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளன.

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய டிஜிட்டல் உள்கட்டமைப்பை தொடர்ந்து சமநிலைப் படுத்துவதால், ஒரு கிளைக்கு இரண்டு ஏடிஎம்கள், ஒரு ஆன்-சைட் மற்றும் ஒரு ஆஃப்-சைட் என்ற உலகளாவிய மாதிரியை இந்தியா பின்பற்றும் என்று தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top