ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் உடைப்பு போன்றே தமிழகத்தில் கலைஞர் சிலைக்கும் அதே நிலை ஏற்படலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கதேசத்தை உருவாக்கிய முஜீப் உர்-ரஹ்மான் சிலைகள் உடைக்கப்பட்டன.
ஆந்திராவிலும் இதேபோன்றுதான் ஜெகன்மோகன் ரெட்டி, பல இடங்களில் அவரது தந்தை ராஜசேகர் ரெட்டியின் பெயரை வைத்தார். அதனை ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இருந்தவாரே இங்கு இடித்து தரைமட்டமாக்கினார்.
அதேபோன்று தமிழகத்தின் அதிகாரம் வேறொருவருக்கு மாறாதா? நல்ல தன்மானமுள்ள தமிழ்மகனிடம் போனால் அனைத்தும் அதேபோல் உடைக்கப்பட்டுவிடும் என திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார். நல்ல தமிழ்மகன் நானாக கூட இருக்கலாம் எனவும் சீமான் பேசினார்.