திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது.
சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு வந்த பாறை, வ உ சி நகர் 11-வது தெருவில் வீடுகளின் மீது விழுந்தது. இதில் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாளை உருண்டு விழுந்த வீடுகளில் உள்ளே இருப்பது எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து முழு விவரங்கள் பாறையை அகற்றிய பிறகு தான் முழுமையான விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.