வைட்டமின் மாத்திரைகள் சில நேரங்களில் நல்லது? பல நேரங்களில் கெட்டது?
வைட்டமின் மாத்திரைகள் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டில் செல்லும் பொழுது சாப்பிடலாம். நல்லது, ஏனென்றால் அப்பொழுது பழங்கள், காய்கறிகள், உணவுகளை எடுத்துச் செல்ல முடியாது. எனவே நல்லது.
ராக்கெட்டில் செல்லாத மற்ற அனைவருக்கும் தேவையில்லை. உலகில் அனைத்து நாடுகளிலும் பழங்கள், காய்கறிகள், உணவுகள் தாராளமாக கிடைக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கிறது.
அதில் அனைத்து வைட்டமின்களும் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது வைட்டமின் மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை.
பழங்களில், காய்கறிகளில், உணவில் கிடைக்கும் வைட்டமின்களே நல்ல வைட்டமின்கள். கடைகளிலும், ஆங்கில மருந்து கடைகளிலும், டிவியில் விளம்பரம் வரும் வைட்டமின்களில் தேவையில்லாத கெட்ட கெமிக்கலை உள்ளடக்கியவை. எனவே அதை சாப்பிடக் கூடாது. அது நல்லதல்ல.
இந்த வைட்டமின் மாத்திரை விற்கும் சுயநல வியாபாரிகள் வேண்டுமென்றே உணவிலுள்ள சத்துப் பொருட்கள் உடலுக்குப் போதுமானதாக இருக்காது. எனவே விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுங்கள் என்று உங்களுக்கு தவறான ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள்.
பழங்களை, காய்கறிகளை, உணவுகளை ஒழுங்காக எப்படி சாப்பிட்டால் நல்ல வைட்டமின்களை பெற முடியும் என்ற முறைகளை இந்த மருத்துவர்களும், வியாபாரிகளும் எப்போதுமே சொல்லிக் கொடுப்பதே இல்லை. இவர்கள், தன் பொருளை விற்பனை செய்வதில் குறியாக இருக்கிறார்கள். எனவே என்னைப் பொறுத்தவரை வைட்டமின் மாத்திரைகள் தேவையே இல்லை.
“வைட்டமின் A” வேண்டுமென்றால், பசுமையான காய்கறிகள், பழங்கள், வெண்ணை, கேரட் ஆகிய பொருள்களில் இருக்கிறது. இவைகளை நமது முறைப்படி சாப்பிட்டால் கண்பார்வை அதிகரிக்கும், பற்கள் உறுதி பெறும், உடல் வளர்ச்சி அடையும்.
“வைட்டமின் B1” வேண்டுமென்றால், கோதுமை, பீன்ஸ், பட்டாணி, பசும்பால், பழங்கள் ஆகியவற்றில் உள்ளது. இவைகளை நமது முறைப்படி சாப்பிட்டால் நரம்பு உறுதி, நல்ல பசி, ஜீரண சக்தி, உடல் வளர்ச்சி ஆகியவை கிடைக்கும்.
“வைட்டமின் B2″ வேண்டுமென்றால், கோதுமை, கீரை வகைகள், பாலிஷ் செய்யாத அரிசி ஆகியவற்றில் இருக்கிறது. இவற்றை நமது முறைப்படி சாப்பிட்டால் உடல் வளர்ச்சி, நரம்பு உறுதி, கண்பார்வை அதிகரிப்பு ஆகியவை கிடைக்கும்.
“வைட்டமின் B6” வேண்டுமென்றால் பச்சை காய்கறிகள், முழுதானிய பொருள்கள் ஆகியவற்றில் இருக்கிறது. இவற்றை நமது முறைப்படி சாப்பிட்டால் மூளைச் சக்தி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு திறன், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
“வைட்டமின் B12” வேண்டுமென்றால் பட்டாணி, பசும்பால், பழைய சாதத்தில் இருக்கிறது. இதை நமது முறைப்படி சாப்பிட்டால் இரத்தவிருத்தி, நரம்பு உறுதி, எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல் அதிகரிக்கும்.
“வைட்டமின்-C “ வேண்டுமென்றால், புளிப்புச் சாறுள்ள பழங்கள், தக்காளி, பச்சை மிளகு, காலிபிளவர், கீரைகள், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் ஆகியவற்றில் இருக்கிறது. இதை நமது முறைப்படி சாப்பிட்டால் காயத்தை ஆற்றுதல், பற்கள் உறுதி, நோய் எதிர்ப்பு சக்தி, உடல் பலம் ஆகியவை கிடைக்கும்.
“வைட்டமின் D” வேண்டுமென்றால், பால், எண்ணெய் குளியல், சூரிய வெளிச்சம், சூரியக்குளியல் ஆகியவற்றில் கிடைக்கும். இவற்றை ஒழுங்காக எடுத்துக் கொண்டால் எலும்பு உறுதி, உடலுக்கு சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை கிடைக்கும்.
“வைட்டமின் E “வேண்டுமென்றால், தாவர எண்ணைகள், தானிய பொருட்கள், ஆப்பிள், திராட்சை, வெண்ணெய், வாழைப்பழம், கேரட் பீன்ஸ், கீரை வகைகள் ஆகியவற்றில் இருக்கிறது. இவற்றை நமது முறைப்படி சாப்பிட்டால் இருதயத்திற்கு உறுதி, இனப்பெருக்கத்தை வளர்ச்சி படுதல் ஆகியவை கிடைக்கும்.
“வைட்டமின் K “ வேண்டுமென்றால், காலிஃப்ளவர், தக்காளி, பட்டாணி உருளைக்கிழங்கு ஆகியவற்றை நமது, முறைப்படி சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தமாக்கும், வளர்ச்சித் திறனை அதிகரிக்கும்.
எனவே இனிமேல் சத்து மாத்திரைகள் ஆகிய வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு இயற்கையான பழங்கள்’ காய்கறிகள், கீரை, உணவு ஆகியவற்றில் உள்ள சத்துக்களை ஜீரணம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
பழங்கள், காய்கறிகளை முறையாக சாப்பிடுவதை கற்றுக் கொடுத்து விட்டால், தனது மருந்துகளை விற்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக, வியாபார மருத்துவர்களும், மருந்து வியாபாரிகளும் எப்பொழுதுமே உண்மையை மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே இனிமேல் சத்து மாத்திரை எனப்படும் வைட்டமின் மாத்திரைகளை புரோபயாடிக் டெக்னிக் தெரியாதவர்கள் ராக்கெட்டில் போகும் மட்டும் பயன்படுத்தலாம். மற்ற அனைவருக்கும் தேவை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.