சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க அங்கீகாரம் , சங்க நிர்வாகிகளுக்கு எதிரான பழிவாங்கல் கைவிடல், ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர் நல கோரிக்கை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கை நிறைவேற்ற கோரி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு samsung இந்தியா தொழிலாளர்கள் சிஐடியில் சங்கம் சார்பில் நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த அறிவிப்பு வழங்கப்பட்ட 14 நாட்களுக்குப் பின்னர் தொழிற் தகராறு சட்டத்திற்கு உட்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என இதன் மூலம் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட வேலை நிறுத்த முடிவு தொடர்பாக எங்கள் பொது பேரவை அங்கீகரித்துள்ளது எனவும் சி ஐ டியு சார்பில் பொதுச்செயலாளர் எல்லன் தெரிவித்துள்ளார்.
13 அம்ச கோரிக்கைகள்
1.தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் 23 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை நிர்வாகம் கைவிட வேண்டும்.
2.தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்களான மோகன்ராஜ், தேவன், குனசேகரன், எல்லன், சோலைமலை, சுபாஷ்குமார், சுபான், மணிமாறன், சரவணன் பாஸ்கர், யுவராஜ், ரவிக்குமார், மணிகண்டன், ரூபேஷ், சண்முகம், பாலாஜி, மோனிஷ் குமார், பார்த்திபன், ஞானராசு, மாரியப்பராஜா, விஷ்வநாதன், கவின் மைக்கிள் ராஜ், சிவனேசன், தேவராஜ் ஆகியோருக்கு நிர்வாகம் வழங்கியுள்ள குற்றச்சாட்டுக் குறிப்பாணை நிலையாணைகளுக்கு விரோதமானது என்பதால், அதனை இரத்து செய்ய வேண்டும்.
3.தொழிலாளர்கள் மோகன்ராஜ், தேவன், குனசேகரன் எல்லன், சோலைமலை, சுபாஷ்குமார், சுபான், மணிமாறன், சரவணன் பாஸ்கர், யுவராஜ், ரவிக்குமார், மணிகண்டன், ரூபேஷ், சண்முகம், பாலாஜி, மோனிஷ் குமார், பார்த்திபன், ஞானராசு, மாரியப்பராஜா, விஷ்வா, மைக்கேல், சிவனேசன், தேவராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை இரத்து செய்ய வேண்டும்.
4.பெரும்பாண்மை தொழிற்சங்கமான தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற எங்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரித்திட நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
5.எங்கள் தொழிற்சங்கத்துடன் ஊதிய உயர்வு உட்பட பொதுக்கோரிக்கைகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்துகிறது.
6.சாம்சங் இந்தியா வெல்பர் பெடரேசன் என்ற குழுவுடன் ஏற்படுத்திகொண்டதாக கூறப்படும் ஒப்பந்தத்தை இரத்து செய்ய எங்கள் தொழிற்சங்கம் வலியுறுத்துகிறது.
7.மேற்கண்ட குழுவுடன் ஏற்படுத்திகொண்ட ஒப்பந்தத்தை, எங்கள் சங்க உறுப்பினர்கள் ஏற்க வேண்டும் என நிர்வாகம், கட்டாயப்படுத்துவதை எங்கள் சங்கம் கண்டிக்கிறது. அது தொழிலாளர் விரோத போக்கு என நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்.
8.வழக்கமாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை எந்தவித நிபந்தனையும் இன்றி, எங்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் 1455 பேருக்கும் Ex-Gratia தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
என தொழிற்சங்கம் கோருகிறது.
9.பெரும்பாண்மை தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிட உடனடியாக தொழிலாளர் அலுவலர்கள் முன்னிலையில் யார் பெரும்பாண்மை என்பது குறித்து அறிய ரகசிய வாக்கெடுப்பு
நடத்திட கோருகிறது.
10.நிர்வாகத்தில் பெரும்பாண்மை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மனுதாரர் தொழிற்சங்கத்திற்கு நிறுவன வளாகத்திற்குள் உடனடியாக அலுவலகம் அமைத்திட நிர்வாகம் அனுமதிக்க வலியுறுத்துகிறது.
11.உடல் குறைபாடு மற்றும் உடல்நல குறையுள்ள சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களை கட்டயபடுத்தி இடம் மாற்றம் செய்து வேலை பளு அதிகம் கொடுத்து நிர்பந்தபடுத்துவது சட்ட விரோத செயலாகும்.
12.அவ்வாறு பாதிக்கபட்ட சங்க தொழிலாளர்களான மார்கண்டயன். பாலசுப்பிரமணியம், ரகுபதி, ராமு ஆகியோர்களை மீண்டும் அவர்களின் முந்ததைய பணி இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
13.மேலும் இடம் மாற்றம் செய்யபட்ட மற்ற பணியாளர்களையும் முந்ததைய பணி இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த அறிவிப்பு வழங்கப்பட்ட 14 நாட்களுக்கு பின்னர், தொழிற்தகராறு சட்டத்திற்கு உட்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்ட வேலை நிறுத்த முடிவு தொடர்பாக எங்கள் பொதுப்பேரவை அங்கீகரித்துள்ளது தெரிவித்துக் கொள்கிறோம் .