Close
நவம்பர் 21, 2024 11:24 மணி

இரண்டாம் நிலைக்காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 8 -ல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை

இரண்டாம் நிலை காவலர் தேர்வு: இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு -2022 -ஆம் ஆண்டிற்கான தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் 08.07.2022 அன்று தொடங்கவுள்ளதென மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை நாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

இப்பணியிடத்திற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 08.07.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மேலும் தொடர்ச்சியான இடைவெளிகளில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

இப்பணியிடத்திற்கு அதிக அளவில் இளைஞர்கள் விண்ணப் பிக்கவும், மேலும் விண்ணப்பித்த இளைஞர்கள் இலவச நேரடி பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள தங்களின் விவரத்தினை decgcpdkt.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக வோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் நேரில் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top