Close
நவம்பர் 22, 2024 11:01 காலை

தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் திட்டக் கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்

தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் திடக்கழிவு மேலாண் திட்ட சுத்திகரிப்பு கருவியை இயக்கி வைத்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் திட்டக் கழிவு மேலாண்மை திட்டம் மூலம் கழிவுபொருட்களை சுத்திகரிக் கும் நவீனகருவியை பயன்பாட்டிற்கு  (17.07.2022)  ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் மூலம் கழிவுபொருட்களை சுத்திகரிக்கும் நவீனகருவி ரூ. 1 கோடிமதிப்பில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இக்கருவிக்கு தஞ்சாவூர் முன்னாள் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் ரூபாய் 75 லட்சமும், மற்றும் மாவட்டநிர்வாகம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சார்பில் 25 லட்சம் என மொத்தம் ஒரு கோடி மதிப்பில் கழிவுபொருட்கள் சுத்திகரிப்பு நவீனகருவி மற்றும் அலுவலக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்புநவீனகருவி 24 மணிநேரமும் செயல்படும், கருவியின் மூலம் நாள் ஒன்றுக்கு திடக்கழிவு 1200 கிலோ முதல் 1500 கிலோ வரை அளிக்கப்பட்டு சுத்தமான பயன்பெறும் சாம்பலை பெறமுடியும். இக்கருவியானது தேசியமாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரிக்கப்பட்ட கருவியாகும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழவழி வகுத்திடும் என்று மாவட்டஆட்சியர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் உத்தரவுக்கிணங்க மகாபலிபுரத்தில் வருகின்ற 28-ஆம் தேதி துவங்க உள்ள சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தஞ்சாவூர் செய்திமக்கள் தொடர்புதுறையின் அதிநவீன மின்னணு விளம்பரவாகனத்தின் மூலம் தஞ்சாவூர் புதியபேருந்து நிலையத்தில் விளம்பரப்படுத்தும் ஒலிம்பியாட் டீசரை  மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  நேரில் பார்வையிட்டார் .
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. ரவிக்குமார், துணை இயக்குனர் மரு. நமச்சிவாயம், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் மரு.ராதிகாமைக்கேல், மரு.சிங்காரவேலு (தலைவர்), மரு.இளங்கோவன் (துணைதலைவர்), மரு.சுரேஷ் (துணைதலைவர்), மரு. பாலமுருகன் (செயலாளர்), மரு.சுவாமிநாதன் (துணைசெயலாளர்),மரு.வேல்முருகன் (பொருளாளர்),மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top