Close
நவம்பர் 22, 2024 3:44 மணி

நிலை மறந்தவன்… சினிமா விமர்சனம்… இங்கிலாந்திலிருந்து சங்கர்..

சினிமா விமர்சனம்

நிலை மறந்தவன்

சமீபத்தில் வெளியான “நிலை மறந்தவன்” படத்தை நேற்று பார்த்தேன். ஏற்கெனவே டிரான்ஸ் (Trance) என 2020 -இல் வெளியான போது மலையாளத்திலும் பார்த்தேன். படத்தின் நெறியாள்கை, ஒளிப்பதிவு, பின்னணி இசை இன்னும் பிறவற்றை பேசப்போவதில்லை, ஆனால் இந்த படத்தின் கதைக்கான மையக்கரு. அதை பேசியே ஆகவேண்டும்.

படத்தின் கதை தன்னம்பிக்கை அளிக்கும் பிரசங்கத்துக்கும், மதபோதனை வியாபாரத்துக்கும் உள்ளமெலிதான ஒற்றுமையைபேசுகிறது. ஒரு மதத்தின்பின்னால் நடக்கும் ஏமாற்று வேலைகளை அப்படியே வெளிச்சத்திற்கு கொண்டுவந்து காட்டும் ஒரு படம் வெளிவருவதே ஆச்சரியமாக உள்ளது.

மதபோதனைக் காட்சிகளும், பிரசங்கமும் பார்வையாளர் களை எப்படி சுண்டி இழுக்க முயற்சிக்கின்றன என்பதை
‘தீர்க்க தரிசன உபவாசக் கூட்டம்’  என்ற பெயரில் மக்களை
கடவுளின் பக்கத்தில் அழைத்துச் சென்று, மக்களின் குறைகளை எல்லாம் நீக்குவதாக மக்களைநம்பவைக்க எவ்வளவு கடினமான பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் அப்படியே படம்பிடித்து காட்டியிருக்கிறது இந்த திரைப்படம்.

மத நிறுவனங்கள், அதற்கு பின்னால் இயங்குகிற கார்ப்பரேட் நடத்துகிற பல நாடகங்களை அரங்கேற்றி, எப்படியெல்லாம் மக்களை இறை நம்பிக்கை என்ற பெயரில் மூடர்களாகவே வைத்து ஏமாற்றுகிறார்கள், சந்தர்ப்ப சூழ்நிலையால் சிக்கும் இளைஞர்களை எப்படியெல்லாம் தங்கள் இலாப நோக்கத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை முடிந்தவரை சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

இது ஒரு மதத்திற்கான செயலாக மட்டுமே பார்க்க இயலாது.., மற்ற மதங்களும் இதே வேலையை தான் செய்கிறது ஆனால் வேறுவிதமான உக்தியில்…, கடவுளை, பக்தியை, வழிபாடு களை, இறை நம்பிக்கையை கேள்வி கேட்பதென்பது பகுத்தறிவு என்கிற திமிரிலோ, தனித்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவோ,  இறை நம்பிக்கையாளர் களை சங்கடப்படுத்தி அதன் வழி குரூர மகிழ்ச்சி கொள்ளவோ  இல்லை என்று கடவுள் மறுப்பாளர்கள் உணர்ந்து, ஒரு தொடர்ப் பிரசாரத்தை செய்து வருவதை, அதில் உள்ள சில நியாயங்களை இந்த தேசம் அங்கீகரித்து வந்து கொண்டிருக்கிற வேளையில், இந்த திரைப்படத்தையும் அங்கீகரிக்க தான் வேண்டியுள்ளது..,

…. இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top