புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா ( மே 5) பிறந்த நாள்…
நடிக பூபதி பி.யு. சின்னப்பா..
மற்ற நட்சத்திரங்கள்
மங்கிவிடும்…
அல்லது
உதிர்ந்து விடும்.
திரையுலகில்
இன்றும் இன்னும்
மின்னும்
உச்ச நட்சத்திரம்
பி.யு.சின்னப்பா.
புதுக்கோட்டையிலிருந்து
புறப்பட்டுப்போய்
திரையுலகில்
காண்போர் வியக்கும்
கலைக்கோட்டை கட்டியவர்.
கட்டுமஸ்தான உடலழகும்
கணீரென்றக் குரலழகும்
காந்தம் தோற்கும் விழியழகும்
கழுத்தில் புரழும் முடியழகும்
வேறெவரையும் விஞ்சிநிற்கும்
ஒரே நாயகன்.
இவர்
இன்றும் கூட
தேவதைகளின்
கனவில் உலவும் கதாநாயகன்.
முதல் இரட்டை வேடம்,
ஒலிபெருக்கி தேவையில்லா
இசைக்கூடம்.
சிந்தை கவர்ந்த ஆணழகன்
இவர்
செல்வம் குவித்த பேரழகன்.
நாடகத்தின்
உயரம் தொட்டார்
ஆனால்
நாற்பதிற்குள்
உயிரை விட்டார்.
புகழுச்சியில் நின்றார்
ஊதியமாய்
பல லட்சம் வென்றார்.
சூரியனைப்போல்
ஜொலித்தார்.
சொத்துக்கள்
பல குவித்தார்.
கலைத்தாயின்
சாதனைப் பிள்ளையாய்
ஆகிப்போனார்.
பின்
சோதனைச் சுழலில்
மூழ்கிப்போனார்.
கடைசியில்
ஒரு சொத்துமின்றி
காலத்தின் சொத்தாய்
மாறிப்போனார்.
–கவிஞர் தங்கம் மூர்த்தி
புதுக்கோட்டை