விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகள் மற்றும் பாடலைப் பயன்படுத்த ரூ.10 கோடி கேட்டு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் இணையத்தில் பரபரப்பு ஆகியுள்ளது.
தனுஷ் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டி இன்ஸ்டாகிராமில் மூன்று பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை நயன்தாரா வெளியிட்டு இருந்தார். அதில் “உங்களைப் போல் அப்பா, அண்ணன் என குடும்பப் பின்னணி பிரபலத்தில் நான் சினிமாவுக்குள் நுழையவில்லை. என் மீதும் எனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனுஷ் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், “ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது. கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது” என்றும் தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார் நயன்தாரா.
தனுஷ் மீதான நயன்தாராவின் குற்றச்சாட்டிற்கு, பிரபல நடிகைகள் பார்வதி, நஸ்ரியா, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி, கௌரி கிஷன், அஞ்சு குரியன், ரியா சிபு, காயத்ரி சங்கர், அதிதி பாலன், மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இணையத்தில் சலசப்பை ஏற்படுத்தியுள்ள நயன்தாராவின் இந்த குற்றச்சாட்டு தனுஷ் மற்றும் நயன் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. நயன் அறிக்கை வெளியிட்ட சில மணிநேரங்களில் மிகப்பெரிய பேசுபொருளானது.
நயன்தாராவுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் ஆதரவு தெரிவித்தனர். நயன்தாராவின் தைரியத்தை பாராட்டி பலரும் இன்ஸ்டாகிராம் முதல் X தளம் வரை கேயூத்து பதிவிட்டிருந்தனர்.
ஆனால் நேரம் செல்ல செல்ல தனுஷுக்கான ஆதரவு பெருகத் தொடங்கியது. X பக்கத்தில் நடிகர் தனுஷ் பக்கம் இருக்கும் நியாயத்தை முதலில் பாருங்கள் என்று பலரும் பதிவு செய்யத் தொடங்கினர். இப்போது ஏராளமான பதிவுகள் குவிந்து கிடக்கின்றன.. நயன்தாராவுக்கு எதிராக ஹேஷ்டேக்கும், தனுஷுக்கு ஆதரவாக #Dhanush ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
‘ஒரு தயாரிப்பாளராக NOC கொடுப்பதும் அல்லது அதை நிராகரிப்பதற்கும் நடிகர் தனுஷுக்கு உள்ளது’ என்று ஒரு பக்கமும், நயன்தாரா தனது கல்யாண கேசட்டை Netflix-யிடம் சும்மாவா கொடுத்தார். பணத்துக்காகத்தானே..? அதே போல் ‘நானும் ரவுடி தான்’ படத்தை தயாரித்த தனுஷ் அதை வியாபாரமாக பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அது மட்டுமில்லாமல், NOC கொடுக்கவில்லை என்று இத்தனை குற்றச்சாட்டுக்க கூறும் நயன்தாரா, ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் தனுஷ் சந்தித்த மிகப்பெரிய இழப்பைப் பற்றி ஏன் பேசவில்லை? 6 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படத்தை 16 கோடி வரை இழுத்து சென்றதற்காக கூட தனுஷ் NOC கொடுக்க முடியாது என்று கூறியிருக்கலாம்.
‘நானும் ரவுடி தான்’ படத்தின் விநியோகஸ்தர்களுக்கு தான் லாபமே தவிர, படத்தை தயாரித்த நடிகர் தனுஷுக்கு லாபம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
அதே இடத்தில் வேறு எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் படத்தின் பட்ஜெட் பேசியதை விட பலமடங்கு அதிகரித்துவிட்டது என கூறிவிட்டு படத்தை பாதியிலேயே கைவிட்டிருப்பார்கள். ஆனால் அந்த சமயத்தில் விஜய் சேதுபதிக்கு பிளாப் மேல் பிளாப் படங்கள், விக்னேஷ் சிவனுக்கு சிம்புவின் போடா போடி படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து எடுக்கப்படும் படம் இது என்பதால் தனுஷ் அவர்களுக்கு உதவிதான் செய்துள்ளார்.
இன்று விக்னேஷ் சிவன் இருக்கும் இடம் தனுஷ் மூலமாக கிடைத்தது என்பதை அவர் மறந்துவிடக்கூடாது என்று காட்டமாக சாடியுள்ளார். I Support Dhanush என்று பலரும் தங்களது கருத்துக்களை இணையத்தில் குவித்து வருகின்றனர்.
தனுஷ் நிச்சயம் நயன்தாராவின் இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்றும் கூறி வருகின்றனர். நயன்தாரா தனுஷ் இருவருக்கும் இடையேயான இந்த மோதல் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னடா..இது? ஒரே அக்கப்போறா இருக்குது? என்று நடுநிலை இணையவாசிகள் அறிக்கைப் போர்களை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.