சினிமாவுல கலர் கலரா ரீல் விடுறாங்க. நிஜத்துல அப்படி கிடையாதுன்னு சொல்வாங்க. அது உண்மை தான். குறிப்பாக நடிகரும், இயக்குனருமான கே.பாக்கியராஜ் தன்னோட படங்களில் யதார்த்தமான சினிமாவைத் தான் பெரும்பாலும் எடுப்பார்.
முந்தானை முடிச்சு, அந்த ஏழு நாள்கள், இது நம்ம ஆளு, தூறல் நின்னு போச்சு படங்களைப் பார்த்தால் இது வாழ்க்கையில் நடக்குற உண்மைச் சம்பவங்களாகவே தெரியும். அவரது கேரக்டரைப் பார்த்தால் நாம் அடிக்கடிப் பார்த்துப் பழகிப் பேசும் கேரக்டர் போலவும் நம்மில் ஒருவராகவுமே தெரியும்.
அந்த வகையில் நாம் பாக்கியராஜ் படங்களுடன் ஒன்றி விடுவோம். அதனால் தான் அவரை திரைக்கதை மன்னன் என்றார்கள். இப்படிப்பட்ட அழகிய சினிமாவைக் கொடுத்த அவருக்கே நிஜ வாழ்க்கையில் அதுபோன்ற சம்பவங்கள் நேரும்போது மனம் விட்டுக் கொடுக்க மறுக்கத் தான் செய்கிறது.
சினிமாவுல ஜாதி, மதம் கடந்து வரும் காதலை நாம் கொண்டாடுவோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் வரும்போது திண்டாடுவோம். இந்த அனுபவம் நடிகர் பாக்கியராஜிக்கும் வந்துள்ளது. அதைப் பற்றி என்ன சொல்கிறார்னு பாருங்க.
ரியல் லைஃப்ல என் பொண்ணு காதல்ல விழுந்தா என்னால ஜீரணிக்க முடியல. என்னன்னா ஜாதி, மதம், புகழ், பணம் இதை எல்லாம் தாண்டி வேற ஒரு காரணம் இருந்தது. என் பொண்ணு பிரிஞ்சி போனா நாங்க கூட கோவத்துல அப்படியே இருந்தோம். கர்ப்பமா இருக்கான்னு கேள்விப்பட்டு கஷ்டமா இருந்தது.
நம்மளை விட்டா நம்ம பொண்ணுக்கு யாரு இருக்கா? வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம். பையன் பொறந்தான். இப்போ அவன் இல்லாம நான் இல்ல. அப்படிங்கற அளவுக்கு வந்துடுச்சி என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் நடிகர் கே.பாக்கியராஜ்.