Close
ஏப்ரல் 3, 2025 1:50 காலை

பெங்கல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெங்கல் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாகவே மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் இயல்புலை இன்னும் திரும்பாத நிலை உள்ளது. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் துயரத்தில் இருந்து வருகின்றனர். மேலும் தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்கல் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top