Close
செப்டம்பர் 19, 2024 7:10 மணி

தமிழ் ஸ்டுடியோ சார்பில் சமூக நீதிக்கான கலைத்திருவிழா: குறும்படம், ஆவணப்படம், அனிமேசன் படங்களுக்கான போட்டி

தமிழ்நாடு

குறும்படம், ஆவணப் படம், அனிமேஷன் படம் போட்டிகள்

தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைந்து நடத்தும்  சமூகநீதிக்கான கலைத்திருவிழா, எழுச்சித் தமிழர் விருது வழங்கும் விழா ஆக. 17 -ஆம் தேதி நடைபெறுகிறது.

எழுச்சித் தமிழர் மணிவிழாவை முன்னிட்டு குறும்படங்கள்-ஆவணப்படங்கள்-அனிமேசன் படங்களுக்கான போட்டியும், சிறந்த படங்களுக்கு இரண்டு லட்சம் பரிசும் வழங்கப்படுகி றது.

பொருள்: சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்.

மொத்த பரிசுத்தொகை – இரண்டு லட்சம்.

(சிறப்பான உள்ளடக்கம் மற்றும் வடிவத்துடன் வெளியாகும் சிறந்த படங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் தொகை பிரித்த ளிக்கப்படும். பங்கேற்கும் எல்லா கலைஞர்களுக்கும் பரிசுகள் உண்டு. பங்கேற்கும் அத்துனைப் படங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். நடுவர் குழுவால் தெரிவு செய்யப் படும்  சிறப்பான குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமே ஷன் படங்கள் ஆகியவை ஆகஸ்ட் மாதம் 16 அல்லது 17  தேதி களில் திரையிடப்படும்.

சிறந்த படங்களின் தெரிவு மற்றும் தேவையை பொறுத்து ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கலை திருவிழாவாக கொண் டாடப்படும். திரையிடல் மட்டுமின்றி பல்வேறு கலைகளும் சங்கமிக்கும் விழாவாக இத்திருவிழா இருக்கும். இந்நிகழ்வின் இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பங்கேற்று பரிசுகளை வழங்குவார்கள்)

வரையறைகள்: இந்த குறும்பட ஆவணப்பட அனிமேஷன் பட நிகழ்வில் பங்கேற்க நுழைவுக்கட்டணம் எதுவுமில்லை.

குறும்படங்கள்/ஆவணப்படங்கள்/அனிமேசன் படங்கள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை வலியு றுத்தும் பொருளில் அமைந்திருக்க வேண்டும். நிகழ்கால அரசியல் பிரச்சனைகள், ஆணவப்படுகொலைகள், நீட் போன்ற பிரச்னைகளை முக்கிய கருப்பொருளாக இருந்தால் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண் டும். ஆவணப்படங்களை 90 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனிமேஷன் படங்கள் 90 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டி ருத்தல் வேண்டும். இந்தியாவில் இருப்பவர்கள் நிச்சயம் DVD பிரதியை அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் உயர்தர (HD) பிரதியிலான தங்களது படைப் பின் இணைப்பை (online streaming, for private watch) அனுப்பி வைக்கலாம்.

இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும். குறும்படத்தின்/ஆவணப்படத்தின்/அனிமேஷன் படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப் படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகிய வற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

நடுவர் குழுவால் தெரிவு செய்யப்படும் படங்கள் சென்னை யில் திரையிடப்பட்டு அவற்றிற்கான பரிசுகள் வழங்கப்படும். குறும்படங்கள் /ஆவணப்படங்கள்/அனிமேஷன் படங்கள் 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வையாக இருக்க வேண்டும். ஒருவர் ஒரு படத்தை மட்டுமே அனுப்பலாம்.

விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள், அலைப்பேசி அழைப்புகள் அனுமதிக்கப்பட மாட்டாது. தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.

பரிசளிப்பு விழா முனைவர் தொல். திருமாவளவன் பிறந்த தினமான ஆகஸ்ட் 17, அதற்கு அல்லது முந்தைய தினங்களில் நடைபெறும்.

விருதுக்கு படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : ஜூலை 1, 2020 (01-07-2022).

படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Pure Cinema Book Shop
Address: Plot 333, New No. 2, Kamarajar Salai, Ramakrishna Nagar, 
Valasaravakkam, Opposite to La Chatelaine School,
opp. to Megamart, Chennai, Tamil Nadu 600087.

https://goo.gl/maps/7ijynfuBUQgo76cX8

தொடர்புக்கு: 9840644916.

சென்னையில் இருப்பவர்கள் நேரிலும் தங்கள் படங்களை கொடுக்கலாம். கலை விழா தொடர்பாக எவ்வித கடிதப் போக்குவரத்தும், அலைப்பேசி அழைப்பும் தேவையில்லை. படங்களை அனுப்பும்போது உங்கள் முகவரி, அலைப்பேசி எண்களை சரியாக எழுதி அனுப்புங்கள். கலை விழா பற்றிய அறிவிப்பு தமிழ் ஸ்டுடியோ இணையதளத்திலும், முகநூலி லும் வெளிவரும். தவிர படங்களை அனுப்பும் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் தகவலுக்கு : https://karunjiruthai.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top