Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே பிறந்த நாளில்…

இந்தியா

திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே பிறந்த நாள்

சத்யஜித் ரே பிறந்த நாளில்..
சுமார் முப்பது திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய ரே அவர்க ளின் எல்லா திரைப்படங்களும் உலக அரங்கில் பரிசும், பாராட்டும் பெற்றது மட்டுமல்லாமல், தனக்கென்று தனி முத்திரையை பெற்றதோடு, இந்தியத் திரைப்படங்களுக்கு கௌரவத்தையும் தேடித்தந்தது எனலாம்.

கலை சார்ந்த, மனித இயல்புகள் சார்ந்த அற்புதமான காட்சி யமைப்புகளுடன் உருவான அவருடைய எல்லாப் படைப்புக ளும் இன்றளவும் காலத்தை வென்று நிற்கின்றன. இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக அற்புதமான திரைப் படங்களை இயக்கி, உலக சினிமாவின் மகத்தான அம்சங்க ளை இந்திய சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தார் ரே என்றால் அது மிகை யாகாது.

இந்தியாவின் ஏழ்மையை, வறுமை நிலையை மேற்கத்திய நாடுகளுக்கு படம் பிடித்து காட்டுகிறார் என்கிற விமர்சனம்  சத்யஜித்ரே மீது உண்டு.  தொடர்ச்சியாக அவர் தந்த படைப்புகள் தந்த சலிப்பை வைத்துக் கொண்டு அவருக்கு அது தான் தெரியும் என்கிற ஒரு முடிவுக்கு நாம்  வந்து விடுவது அபத்தம்.

சினிமா உலகம் இருக்கும் வரை அவர் பேசப்படுவார், விமர்சனங்களையும் உள்ளடக்கியபடி.  ஒவ்வொரு படைப்பாளியும், தனக்கென்று ஒரு வரம்பை விதித்து கொள்வது அவர்களது படைப்பியல் சார்ந்த உரிமை, அதை அவர்கள் யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

அதேசமயம் வரம்பை மீறிய இலக்கிய கர்த்தாக்கள் தான் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதை ஒரே மாதிரியான சலிப்பூட்டும் படைப்புகளை தரும் படைப்பாளிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்…

இங்கிலாந்திலிருந்து… சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top