சென்னை அருகே திருவொற்றியூர் கஞ்சா விற்ற குணசேகரன் (48) என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய படுவதாக திருவொற்றியூர் காவல் சார்பு ஆய்வாளர் ஆய்வாளர் முகமது இர்பானுக்கு திங்கள்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் காதர் மீரான் தலைமையில் அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குணசேகரன்(48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் ஆந்திரா மாநிலம் அன்னாவரத்திலிருந்து காஞ்சாவை வாங்கி வந்து வடசென்னை பகுதியில் குணசேகரன் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து குணசேகரனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து குணசேகரனைக் கைது செய்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
ReplyReply allForward
|