Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

மணலியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் திருடு போன ஐம்பொன்சிலை மீட்பு

திருவொற்றியூர்

மணலியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் திருடு போன நிலையில் வியாழக்கிழமை போலீசாரால் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

மணலியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் திருடு போன  ஐம்பொன் சிலைகள் வியாழக்கிழமை போலீசாரால் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை வியாழக்கிழமை போலீசார் மீட்டனர். மேலும் இச்சம்பவத்தில்  தொடர்புடைய அந்தோணி என்ற யுவராஜை(55) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மணலி சிபிசிஎல் நகரில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது.  இக்கோயிலில் ஐம்பொன்னாள் வடிவமைக்கப்பட்ட பெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது .
 வைக்காடு கிராம நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை காலை கோயிலை திறந்து பூஜைகள் செய்வதற்காக வந்த அர்ச்சகர் கோயிலின் இரும்பு கேட் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மூன்று சிலைகளில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் திருடி செல்லறப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தார் .
இது குறித்த தகவல் அறிந்த மணலி காவல் நிலைய போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இதில் இதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவர் சிலைகளை திருடிச் செல்வது தெரியவந்தது இதனையடுத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசார் திருவொற்றியூர் பகுதியில் பதுங்கி இருந்த அந்தோணியை புதன்கிழமை இரவு கைது செய்தனர் .
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில்  ஐம்பொன் சிலைகளை திருடியது அந்தோணி தான் என்பதும் திருடப் பட்ட ஐம்பொன் சிலைகளை கோயிலுக்கு அருகே மறைவான ஓரிடத்தில்  பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.  இதனையடுத்து அவரை அழைத்துச் சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர்.
 இது குறித்து வழக்கு பதிவு செய்த மணலி காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்ட அந்தோணியை பொன்னேரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை ஒரே நாளில் நீட்டு குற்றவாளியை கைது செய்த மணலி காவல் ஆய்வாளர் சுந்தர் உள்ளிட்ட சிறப்பு படையினருக்கு ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top